tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க திட்டம்

சம்பள செலவை மிச்சப்படுத்த, பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (வீஆர்எஸ்) அமல்படுத்தி, பிஎஸ்என்எல் பத்திர வெளியீடு மூலம் 6700 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலும் விரைவில் கிடக்கும் என தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இருப்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயம். இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை அளிப்பதே பெரும் சுமையான நிலையில், பிஎஸ்என்எல் ஓய்வு வயதைக் நெருங்கும் ஊழியர்களுக்கு வீஆர்எஸ் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் செலவை மிச்ச படுத்த முடியும் என்று பிஎஸ்என்எல் நம்புகிறது.

இவ்வாறு திரட்டப்படும் தொகையில், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு 6365 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகை 4ஜி சேவையை விரிவுப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் சிறந்த 4ஜி சேவையை வழங்கமுடியும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் எம்டிஎன்எல் நிறுவனத்தில் 1080 கோடி ரூபாய் மிச்சப் படுத்த முடியும் என்றும், இந்த ஓய்வு திட்டத்திற்காக சுமார் 9500 ஊழியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் கூட செலவை மிச்ச படுத்த முடியும் என்று எம்டிஎன்எல்லின் நிர்வாக இயக்குனர் பி.கே.புர்வார் கூறியுள்ளார்.

இது குறித்து எம்டிஎன்எல் நிறுவனத்தில் தலைவர் கூறுகையில், ”மொத்தம் 19,000 பேர் விருப்ப ஓய்வு பெற தகுதி உடையவராக உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்க நினைத்திருந்தோம், ஆனால் தற்போதைய கணக்கீட்டின் படி சுமார் 9500 ஊழியர்கள் இந்த வீஆர்எஸை பெற்றால் கூட இதன் மூலம் 1080 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் பி.கே.புர்வார் கூறியுள்ளார்.


;